RTI - CM CELL PETITONS ,OTHER PETITIONS & IMPROPER PETITIONS
- த.அ.உ.ச. வழக்கு 48145/2/19/2012 (18325/9/2013) (10336/9/2014), நாள் 01.10.2015 மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவில் கொடுக்கப்படும் மனு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாளில் கொடுக்கப்படும் மனு மற்றும் சமாபந்தி நாட்களில் கொடுக்கப்படும் மனு, இவைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக கேட்கப்படும் தகவல்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தகவல்கள் வழங்க வழிவகை இல்லை என்பதை ஆணையம் பதிவு செய்கிறது. - Click here to Download
- த.அ.உ.ச. வழக்கு CP 4033/SCIC/2023, நாள் 17.02.2025 கோரிக்கை தனி நபர் சம்பந்தப்பட்ட குறை தீர் மனுவாகும். முதலமைச்சரின் தனிப்பிரிவு இம்மாதிரியான கோரிக்கைகளுக்கு தீர்வு காண இயலாது. - Click here to Download
- த.அ.உ.ச. வழக்கு SA 22062/SCIC/DEF/2022, நாள் 07.02.2025 மேல்முறையீட்டாளருக்கு இவ்வாணையத்திலிருந்து அனுப்பப்பட்ட மேற்குறிப்பிட்ட கடிதமானது அஞ்சல் துறையால் “REFUSED". என்று குறிப்பிடப்பட்டு ஆணையத்திற்கே திரும்ப வரப்பெற்றுள்ளது. எனவே, இவ்வழக்கினை இத்துடன் முற்றாக்கம் செய்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.. - Click here to Download
- த.அ.உ.ச. வழக்கு எஸ்.ஏ.30192//2010, நாள் 21.01.2011 மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் வேண்டி மனுச் செய்யாமல் மனதில் தோன்றியவற்றை எல்லாம் பண்பாடற்ற முறையில் எழுதி மனுச் செய்துள்ளார். விசாரணைக்கு வந்திருந்த பொதுத் தகவல் அலுவலர் மனுதாரரின் மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். அதை ஆணையம் ஏற்று மனுதாரரின் மனுவை விதி 7 (9)ன் கீழ் த் தள்ளுபடி செய்கிறது. Click here to Download
Post a Comment