ஊழியர் விரோத போக்கை கடைப்பிடித்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு எதிரான வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் போராட்டம் - ஒரு பார்வை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு எதிரான வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் போராட்டம் - ஒரு பார்வை

 
  • TNROA மாநில மாநாடு வரவேற்பு குழு நிறைவு கூட்டம் & மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழா மாநில மாநாடு வரவேற்பு குழு நிறைவு கூட்டம் 05.10.2024 அன்று சென்னையில் சிறப்புற நடைபெற்றது. 
  • இக்கூட்டத்திற்கு பின்பாக நடைபெற்ற மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், 09.10.2024 திருநெல்வேலி தர்ணா போராட்டத்தில் அனைத்து மாநில நிர்வாகிகளும் பங்கு கொள்வது எனவும், ஊழியர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அதிகார மமதையோடு, கண்டன பதாகைகளை அகற்றி, ஊழியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வரும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, வருவாய்த்துறை அலுவலர்களின் பிரச்சனைகளுக்கு சமூக தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.
  • திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து வருகின்ற 09.10.2024 அன்று நடைபெறும் மண்டல தர்ணா போராட்டத்தில், 10 மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் திரளாக பங்குகொள்வதென முடிவு செய்யப்பட்டது.
  • வருவாய்த்துறை அலுவலர்கள் சந்தித்து வரும் பல்வேறு களப் பிரச்சனைகள், அதீதமான பணி நெருக்கடிகள், இளநிலை/ முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணை, இளநிலை வருவாய் ஆய்வாளர் & தட்டச்சர் இடையேயான பணி முதுநிலை ஆணைகள், அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் ஆகிய இனங்கள் குறித்து விவாதித்து எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிட வருகின்ற 19.10.2024 (சனிக்கிழமை) அன்று திருநெல்வேலி மாநகரில் அவசர மத்திய செயற்குழுவை கூட்டுவதென முடிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத போக்கு நடவடிக்கைகள் பின்வருமாறு.
  • இளநிலை வருவாய் ஆய்வாளர் திரு. அக்னி குமார் டிஸ்மிஸ்.
  • மாநில துணைத்தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர் திரு.சுப்பு அண்ணன் வட்டாட்சியர் நிலையில் கேபிள் டிவி பிரிவில் 8 மாதம் பணியாற்றிய நிலையில் பணியிட மாறுதல்
  • மாவட்டச் செயலாளர் திரு .மாரிராஜ் பணியிட மாறுதல்
  • வட்டாட்சியர் நிலையில் உள்ள ஒருவருக்கு 17 பி ன் கீழ் 5 வருடம்  இன்கிரிமென்ட் கட்
  • நான்கு ஊழியர்களுக்கு அதுவும் வட்டாட்சியர் துணை வட்டாட்சியர் நிலையில் உள்ள ஊழியர்களுக்கு 3 வருடம் இன்கிரிமெண்ட் கட்
  • மாவட்ட ஆட்சியர் அலுவலக இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு  17 பி மற்றும் 17A 
  • வருவாய்த்துறை பெண் ஊழியர்களை மீட்டிங்கில் வைத்து மரியாதை குறைவான வார்த்தைகளால் அதுவும் கண்ணிய குறைவாக வசை பாடுவது எடுத்துக்காட்டாக நீ என்ன ஆடிட்டு தான் வருவீங்களா என  பேசுவது
  • திருநெல்வேலியில் துணை ஆட்சியராக பணிபுரிந்து வரும் நமது தோழரை மனம் நோகும் அளவிற்கு மரியாதை இல்லாமல் பேசியது
  • திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழக முழுவதும் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களில் முன்பு உள்ள பிளக்ஸ் பேனரை அந்தந்த வட்டாட்சியரை மிரட்டி அப்புறப்படுத்தியது
  • இரண்டு முறை மாநில நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடந்த போது ஒத்துக் கொண்ட கோரிக்கைகளை நாளது தேதி வரை அமுல் படுத்தாமல் தொடர்ந்து ஊழியர்களை அவமரியாதையாக நடத்துவது
  • மாவட்ட மையமும் இது நாள் வரை பல்வேறு ஆர்ப்பாட்டம் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தும் மாவட்ட ஆட்சியர் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஊழியர்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்.இவருடன் மாவட்ட வருவாய் அலுவலரும் சேர்ந்து கொண்டு பல்வேறு நிலைகளில் உள்ள ஊழியர்களை பலி வாங்கி வருகிறார்கள்
தர்ணா போராட்டம்
  • இதனைக் கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் திண்டுக்கல்  மதுரை சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் தென்காசி கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தென் மாவட்டங்களைச் (10 மாவட்டங்கள்) சேர்ந்த ஊழியர்கள் வருகின்ற புதன்கிழமை (  09.10.24) பிற்பகல் தற்செயல் விடுப்பு எடுத்துக்கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் தர்ணா போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது
  • அதனை ஏற்று நமது மாவட்டத்திலும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் ,வட்டக் கிளை  நிர்வாகிகள் முன்னணி தோழர்கள் தோழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெருமளவில் இந்த போராட்டத்தில் பங்கு கொண்டு திருநெல்வேலி மாவட்ட வருவாய் துறை ஊழியர்களுக்கு கை கொடுத்து தர்ணா போராட்டம் வெற்றி முழக்கத்துடன் நடைபெற்றது.
*_வெல்வது நிச்சயம்...!_*
*_அடக்குமுறை ஒரு போதும் வென்றதில்லை...!_*
*_அதிகாரத்தின் ஆணி வேரை அசைத்து பார்க்க ஒரு போதும் அஞ்சியதில்லை...!_*
*_அணி திரள்வோம்...!_*
*_அதிகாரத்தின் கோர முகத்தினை கிழித்தெரிவோம்...!_*


தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 19.10.2024 நாளன்று நடைபெற்ற  மத்திய செயற்குழு முடிவின்படி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், நிலுவைக் கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும் மூன்று கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
  1. பெருந்திரள் முறையீடு
  2. ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்
  3. பணி புறக்கணிப்பு மற்றும் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம்
பெருந்திரள் முறையீடு
  • தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்க்குழு கூட்டம் கடந்த 19.10.2024 அன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் தொடர் ஊழியர் விரோத போக்கினை கண்டித்தும், வருவாய்த்துறை அலுவலர்களின் நீண்ட நாள் நிலுவை கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், நாளை 25.10.2024 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு பெருந்திரள் முறையீடு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் ஒரு மொத்த உறுப்பினர்களால் சிவகங்கை மாவட்ட மையத்தின் சார்பாக நேரில் வழங்கப்பட்டது.

ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்

  • இரண்டாம் கட்டமாக 29.10.2024 - ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் வெற்றி பெற்றது
  • சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை - 266
பணி புறக்கணிப்பு மற்றும் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம்
  • முதற்கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று 38 மாவட்டங்களிலும் பெருந்திரள் முறையீடு இயக்கம் மிக எழுச்சியாக நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இன்று (29.10.2024) நடைபெற்ற ஒட்டுமொத்த தற்செயல்  விடுப்பு போராட்டத்தில் 10,570 வருவாய்த்துறை அலுவலர்கள்கலந்து கொண்டு நமது இயக்க பலத்தை நிரூபித்துள்ளனர். (பயிற்சி, நீண்ட விடுப்பு, பேரிடர், சட்டம் ஒழுங்கு பணி உள்ளிட்டவை நீங்கலாக).
  • மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் இப்போராட்டம் நடைபெற்று உள்ளதும், முந்தைய போராட்டங்களை விட கூடுதலான எண்ணிக்கையில் தோழர்கள் கலந்து கொண்டுள்ளதும் நமது இயக்க வலிமை அதிகரித்துள்ளதை பறைசாற்றுகின்றது.
  • இறுதி கட்ட போராட்டமான நவம்பர் 26 முதல் நடைபெற உள்ள பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் வெற்றி முழக்கத்துடன் தொடங்கியது
  • போராட்டம் 3 நாட்கள் நீடித்தது. மூன்றாம் நாள் முடிவில் கீழ்கண்ட முடிவுகள் எட்டப்பட்டது
  • கடலோர மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பெருமழை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மேலாக போராட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதர மாவட்டங்களில் போராட்டங்கள் எழுச்சியாக நடைபெற்று வருகிறது. 
  • இந்நிலையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோரின் அழைப்பின் பேரில் இன்று (28.11.2024) சென்னையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
  • இதில் நம்முடைய முக்கிய கோரிக்கைகள் மீது முன்னேற்றம் & தீர்வு ஏற்பட்டுள்ளது.
  • பல்வேறு மாவட்டங்களில் அலுவலக உதவியாளர்களே இல்லாத நிலையில், இப்பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும் என வலியுறுத்தியதில் இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், 15 நாட்களுக்குள் இதற்கான இறுதி ஆணை வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி 38 மாவட்டங்களிலும் ஒரு மாத காலத்திற்குள் இப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
  • *தற்போது தமிழகத்தில் புயல் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு கலைக்கப்பட்ட 97 பேரிடர் மேலாண்மைப் பிரிவு பணியிடங்களை மீள வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியதில், இது குறித்து நிதித் துறையில் பேசி வருவதாகவும் மிக விரைவில் இதற்கான ஆணைகள் வெளியிடப்படும் என ஆணையர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
  • *கருணை அடிப்படை நியமன உச்சவரம்பு 5% ஆக குறைக்கப்பட்டதால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக எடுத்துரைத்ததில் இதனை நிச்சயமாக சரி செய்திட வேண்டும் என்றும், இதுகுறித்து அரசிடம் பேசி விரைவில் தீர்வு காணப்படும் எனவும் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் அக்கறையோடு உறுதி அளித்துள்ளார்கள்.*
  • *வருவாய்த்துறையில் ஒவ்வொரு பணியிடங்களாக கலைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது தொடர்பாக நமது சார்பில் வலிமையாக வலியுறுத்தியதில், எந்த ஒரு பணியிடத்தையும் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் கோவையில் நூற்றுக்கும் மேற்பட்ட நகர்ப்புற நிலவரி திட்ட பணியிடங்களை மாநகராட்சிக்கு மாற்றம் செய்யும் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.*
  • *முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக, தற்போது நடைபெற்று வரும் பேரிடர் மேலாண்மை பணிகள் முடிந்தவுடன் ஒரு வார காலத்தில் பரிசீலனை செய்து உரிய தெளிவுரை வழங்க நடவடிக்கை எடுப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
  • *நம்முடைய பல்வேறு கோரிக்கைகளுக்கும் பணியிட இழப்புகளுக்கும் காரணமாக உள்ள நிதித்துறை குறித்து மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அரசின் முக்கிய பணிகளை மேற்கொள்ளும் வருவாய்த்துறையில் பணியிடங்கள் கலைப்பது குறித்து பரிசீலனை செய்து பணியிடங்கள் தொடர நடவடிக்கை எடுப்பதாக நிதித்துறை அமைச்சர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள்.*
  • *வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ.அமுதா, இ.ஆ.ப., அவர்களிடம் மேற்கண்ட கோரிக்கைகள் மற்றும் துணை ஆட்சியர் பதவி உயர் பட்டியலை விரைவில் வழங்கிட வலியுறுத்தியதில் ஒரு மாத காலத்தில் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணி நெருக்கடிகள் குறித்து பேசியதில் தேவையான இனங்களில் கூடுதல் கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.*
  • *மேற்கண்ட கோரிக்கைகள், வருவாய்த்துறையின் நலன் மற்றும் பணியிடங்களை காத்தல் குறித்து முதலமைச்சரின் தனிச் செயலாளர்-2 திரு.ம.சு.சண்முகம், இ.ஆ.ப., அவர்களை சந்தித்து பேசப்பட்டுள்ளது.*
  • *நம்முடைய போராட்ட அறிவிப்பின் காரணமாக போராட்டத்துக்கு முந்தைய தினமே வரலாற்று சிறப்பு வாய்ந்த இளநிலை/ முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணை பெற்ற நிலையில், நம்முடைய வீரியமான போராட்டத்தின் காரணமாக முக்கிய கோரிக்கைகளில் பெரும் முன்னேற்றமும், திருப்பமும் ஏற்பட்டுள்ளது மாபெரும் வெற்றி.*
  • *அதேபோன்று வருவாய் நிருவாக ஆணையர் இத்துறையில் பணியேற்று இரண்டு மாதங்கள் ஆவதாகவும், எனவே இனி போராட்டத்திற்கான அவசியம் ஏற்படாது என்றும், கோரிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் நிறைவேற்றி தரப்படும் என உறுதியோடு தெரிவித்துள்ளார்கள்.*
  • *25 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையாக இருந்த பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணை வெளியிட்ட அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.*
  • *இதற்கெல்லாம் மேலாக ஏற்கனவே மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக 10 மாவட்டங்களுக்கு போராட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை 6 மாவட்டங்களுக்கு பெருமழைக்கான ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பல புயல்கள் அடுத்த சில நாட்களுக்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நம்முடைய போராட்டங்களை தொடர்வதில் சிரமங்கள் உள்ளது.*
  • *இவைகளை உள்ளடக்கி தற்போது நடைபெற்ற மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், நடைபெற்று வரும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது எனவும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட ஒரு மாத காலம் அவகாசம் வழங்குவது எனவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.*
  • *நம்முடைய ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாக போராட்டத்தின் முதல் நாளில் சரித்திர சிறப்பு வாய்ந்த பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணை பெற்றுள்ளோம். இது நிச்சயமாக நம்முடைய இயக்க வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையும் என்பது உறுதி.*
  • *மேலும் சில அரசாணைகளை ஒரு மாத காலத்தில் நிச்சயம் பெறுவோம்!*
  • *இப்போராட்டத்தில் ஒற்றுமை உணர்வோடு, நம்பிக்கையோடு பங்கு கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகள், வட்டக்கிளை நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் மற்றும் தோழமை சங்கத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.*
*இறுதி வெற்றி நமதே!*
*தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA).*







Post a Comment

Previous Post Next Post