TNROA - மாநில நிர்வாகிகள் கூட்ட முடிவுகள் - 26.5.2025
- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் 26.5.2025 இரவு 7.00 மணி முதல் இரவு 8.10 மணி வரை காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் எம்.பி.முருகையன் தலைமை வகித்தார். அனைத்து மாநில நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
- வருகின்ற 29.5.2025 (வியாழன்) அன்று நடைபெறும் சென்னை பெருந்திரள் முறையீடு இயக்கத்தில் அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் 38 மாவட்ட நிர்வாகிகள் முழுமையாக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டது.
- 25.6.2025 அன்று FERA கூட்டமைப்பின் சார்பில் மேற்கொள்ளவுள்ள "ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு, மாவட்டத் தலைநகர் பேரணி & தர்ணா" மற்றும் 3.7.2025 அன்று TNROA "ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு & 24 மணிநேரம் இரவு பகலாக தொடர் காத்திருப்பு" ஆகிய போராட்டங்களில் 100% வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் வகையில், பொறுப்பு மாவட்டங்களில் விரிவான "பிரச்சார இயக்கம்" மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
- ஜூலை 1 நடைபெறவுள்ள "வருவாய்த்துறை தினத்தை" FERA கூட்டமைப்பின் சார்பில் மிக எழுச்சியாக நடத்துவது எனவும், அன்றைய தினம் மக்களோடு வருவாய்த்துறை என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சேவைகள், திட்டங்கள் குறித்து எடுத்துரைப்பது எனவும், மாவட்ட & வட்ட அளவில் இரத்ததான முகாம் உள்ளிட்ட பொது நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
- இறுதியில் மாநிலப் பொருளாளர் வெ.சோமசுந்தரம் நன்றி கூறினார்.
மாநில மையம்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA).
Post a Comment