_தோழர் RAK நினைவலைகள்

*_தோழர் RAK நினைவலைகள்!_*
  • *தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் முதல் மாநிலத் தலைவர் தோழர் R.A.கூடலிங்கம் அவர்களின் நினைவு தினத்தில் (20.1.2025) அவரின் புகழ் போற்றுவோம்.*

  • *நமது சங்கம் தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் போக்குவரத்து வசதியும், அடுத்த வேலை உணவிற்கும் வழியில்லாத நிலையிலும் கூட, தமிழ்நாட்டின் அனைத்து வட்டங்களிலும் கால் பதித்து சங்கத்தின் அவசியம் குறித்து எழுச்சி உரையாற்றியவர் தோழர் RAK. 

  • தற்போதுள்ள பொது போக்குவரத்து வசதிகள், தங்குமிட வசதிகள் இல்லாத காலகட்டத்தில் வட்ட அலுவலகங்களில் இரவு தங்கி பிரச்சாரம் மேற்கொண்டார் RAK.*

  • *1974 ஆம் ஆண்டு அப்போதைய திராவிட முன்னேற்ற கழக அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்க மறுத்ததை கண்டித்து எழுச்சியான போராட்டம் சென்னையில் நடைபெற்றது. 

  • இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்த நடவடிக்கை குழுவின் தலைவர் & தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் RAK, அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். 

  • 16 மாதங்கள் தற்காலிக பணிநீக்கத்தில் இருந்த தோழர் RAk, பணி ஓய்வு தினத்தன்று மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு பணி ஓய்வு பெற்றார்.*

  • *தோழர் RAK மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் நமது சங்கத்திற்கு அரசின் அங்கீகாரம் கிடைத்தது, பதவி உயர்வுக்கான வயது வரம்பு நீக்கப்பட்டது, அரசு ஊழியர்களின் அந்தரங்க கோப்பு முறை ஒழிக்கப்பட்டது, இளநிலை உதவியாளர் நிலையிலிருந்து உள்வட்ட வருவாய் ஆய்வாளர் பணியிடங்கள் உதவியாளர் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது.*

  • *நீண்ட காலம் அமைக்கப்படாமல் இருந்த ஊதியக்குழு, RAK தலைமையிலான சங்கத்தின் முயற்சியின் காரணமாக இரண்டாவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது.*

  • *தோழரின் தியாகங்களை மனதில் ஏந்தி தொடர்ந்து பயணிப்போம், முன்னேறுவோம்.*

  • *வீரவணக்கம் வீரவணக்கம் RAK தோழருக்கு வீர வணக்கம்!*

*மாநில மையம்,*
*தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA).*

Post a Comment

Previous Post Next Post