RTI - CCTV - PHOTOCOPY AND OTHERS

 RTI - CCTV - PHOTOCOPY AND OTHERS

  • த.அ.உ.ச.வ.எண. 17323/B/2021 நாள் 29.11.2024 மனுதாரர் கோரும் CCTV Footage என்பது வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை கண்காணிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதை தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 மூலம் பொது ஆவணமாக கருத இயலாது. அவ்வாறு 23.09.2021-இன் பிற்பகல் 3.30 மணி முதல் 7.30 மணி வரையிலான ஒட்டுமொத்த CCTV Footage-யும் வழங்கினால், பொது மக்களின் தனிப்பட்ட அந்தரங்கத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இதனால், மனுதாரர் கோரும் தகவல் வழங்க இயலாத சூழ்நிலை உள்ளது. ஆனால், பொது அலுவலகத்தின் CCTV Footage அவசர காரணங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில், காவல் துறை மற்றும் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆய்வுக்கும், நீதிமன்ற உத்தரவுக்கும் உட்பட்டு வழங்கப்படுமேயன்றி, மனுதாரருக்கு தகவலாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இவ்வாணையம் தீர்மானித்து, இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. - Click here to Download

  • த.அ.உ.ச.வ.எண. SA 8914/E/2023 நாள் 13.02.2025  மனுதாரரே ஆவணங்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கான அனுமதியை தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளின்படி வழங்க வழிவகையில்லை என்பதை இவ்வவாணையம் மனுதாரருக்கு சுட்டிக்காட்டி, தானே (மனுதாரரே) ஆவணங்களை புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி வேண்டிய மனுதாரரின் கோரிக்கையை ஆணையம் நிராகரிக்கிறது. Click here to Download


Post a Comment

Previous Post Next Post