RTI - மூன்றாம் நபர் தகவல் (Third party)

 RTI - மூன்றாம் நபர் தகவல் (Third party)

  • த.அ.உ.ச. வழக்கு எஸ்.ஏ.30397/ விசாரணை/2010, நாள் 06.01.2011 மனுதாரர் கேட்டுள்ள தகவலை எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி தனி நபருக்குச் சொந்தமான விவரங்களைத் தருதல் சட்டப்படி குற்றமாகும் என்றும், அவ்வாறு வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் தகவல் வழங்க இயலாது என மறுத்ததற்கும், ஆறு மாதங்களாகத் தகவல் தராததற்கும், தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 19(1)-ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலரிடமிருந்து பெற்று அனுப்புமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு click here to Download 
  • த.அ.உ.ச. வழக்கு எஸ்.ஏ.SA 8569/B/2023, நாள் 07.02.2025 கோமங்கலம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் R.மணிமாறன் அரசுப் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இம்மனுவிற்கு தகவல் வழங்கப்படும் நாள் வரை அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நன்னடத்தை விதிகள் 1973 மற்றும் நாளது தேதி வரையிலான அதன் திருத்தங்களின்படி சொத்து விபரம் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டிய ஆண்டுகள் விபரம். சொத்து விபரம் தாக்கல் செய்யாத ஆண்டுகள் விபரம் உள்ளிட்ட 11 இனங்களில் தகவலை வழங்கிட கோரியுள்ளார். விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல் வழங்கிட திரு.மணிமாறன் ஆட்சேபணை தெரிவித்துள்ளதாலும், சட்டப்பிரிவு 8(1)(j)-ன்படி தகவல் வழங்க இயலவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆவணங்கள் பரிசீலனை செய்ததன் அடிப்படையில், மனுதாரருக்கு பொதுத் தகவல் அலுவலரால் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவுகளின்படி வழங்கப்படக்கூடிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கருதி, இவ்வழக்கினை இத்துடன் முற்றாக்கம் செய்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.  click here to Download 

Post a Comment

Previous Post Next Post