FERA - 25.04.2025 அன்றைய ஒரு மணி நேர ஆர்பாட்டம்
- FERA - வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு - 25.4.2025 வரலாற்று சிறப்பு மிக்க முதல் போராட்டம் மாபெரும் வெற்றி - பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் - களப்பணி ஆற்றிய மாவட்ட & வட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்:
- வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில உயர்மட்ட குழு கூட்ட முடிவின்படி வருவாய்த்துறை அலுவலர்களின் எட்டு அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (25.4.2025) மாலை நடைபெற்ற மாநிலம் தழுவிய ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் அனைத்து மாவட்ட/ வட்டக் கிளை ஆர்ப்பாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று உள்ளது.
- முதல் இயக்கத்திலேயே மாவட்டம் தோறும் பல்லாயிரக்கணக்கான வருவாய்த்துறை அலுவலர்கள் உணர்வுபூர்வமாக ஒற்றுமையோடு பங்கு கொண்டது மாநில முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
- 38 மாவட்டம் மற்றும் 317 வட்டக் கிளைகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால், நமது கூட்டமைப்பின் கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
- அனைத்து நிலை அலுவலர்களின் பங்களிப்பு நிச்சயம் அனைத்து கோரிக்கைகளையும் விரைவில் வென்றெடுக்கும்.
- இப்போராட்டத்தில் நம்பிக்கையோடு பங்குகொண்ட அனைத்து வருவாய்த்துறை சொந்தங்களுக்கு வாழ்த்துக்களையும், கடந்த சில நாட்களாக அயராது களப்பணி ஆற்றிய அனைத்து மாவட்ட & வட்ட ஒருங்கிணைப்பாளர்கள், முன்னணி ஊழியர்களுக்கு FERA மாநில அமைப்பின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
- இப்போராட்டம் வரலாற்றில் இடம்பெறும் என்பது உறுதி!
- அடுத்த கட்ட நகர்வுகளுக்கு விரைவில் திட்டமிடுவோம்!
- வெற்றி பெறுவோம்!
புரட்சி வாழ்த்துகளுடன்...
மாநில அமைப்பு,
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA).
மற்றும்
மாவட்ட மையம்,
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA).
சிவகங்கை.
💐💐💐💐💐💐💐
✊🏼✊🏼✊🏼✊🏼✊🏼✊🏼✊🏼✊🏼
FERA - The Force!
FERA - The Fire!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Post a Comment