TNROA - உயர் அலுவலர்கள் சந்திப்பு 10.6.2025
- வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் தொடர்பாக இன்று (10.6.2025) அரசு உயர் அலுவலர்களை சந்தித்து பேசப்பட்டது.
- கருணை அடிப்படையிலான பணிநியமனத்திற்கு ஏற்பட்டுள்ள தடை தொடர்பாக ஏற்கனவே நமது கோரிக்கையின் அடிப்படையில் வருவாய் நிர்வாக ஆணையர் கருத்துரு அனுப்பியுள்ள நிலையில், இது குறித்து மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் திரு.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., மாண்புமிகு முதலமைச்சரின் செயலாளர்-1 முனைவர்.பி..உமாநாத், இ.ஆ.ப., ஆகியோரை சந்தித்து விரிவாக பேசப்பட்டது.
- கடந்த ஈராண்டுகளாக கருணை அடிப்படையில் நியமனம் இல்லாமல், மரணமடைந்த அரசு ஊழியர்களின் குடும்பங்கள் அல்லல்படுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இது குறி்த்து மீள பரிசீலனை செய்வதாகவும், நிலுவையில் உள்ள கருணை அடிப்படை விண்ணப்பங்களை ஒரே நடையில் (one time) நியமனம் வழங்க பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் அவர்களால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேசப்பட்டது.
- மாண்பமை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக பணியிறக்கம் பெற்ற அலுவலர்களுக்கு மீண்டும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக, அரசாணை எண்:65க்கு ஏற்பட்டுள்ள நீதிமன்ற தடையாணை குறித்தும், பணியிறக்கம் பெற்ற அலுவலர்கள் கீழ் நிலையிலேயே பணி ஓய்வு பெறுவது குறித்தும், சென்னை உயர்நீதிமன்ற Registar (Judcial) மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரை நேரில் சந்தித்து விரிவாக பேசப்பட்டது. இதில் வருகின்ற 18.6.2025 அன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாகவும், அன்றைய தினமே இவ்வழக்கினை முடிவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான ஒருங்கிணைந்த பணிமுதுநிலை குறித்த தெளிவுரைகள் தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் அவர்களிடம் பேசியதில், இது குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் நாளை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், விரைவில் நீதிமன்ற வழக்கு முடிவு செய்யப்பட்டு திருத்திய தெளிவுரைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வருவாய்த்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதில் நிதித்துறையால் தொடர்ந்து காலதாமதம் செய்யப்படுவது குறித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்தும் விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
- சட்டமன்ற தேர்தல் பணிகள் நெருங்கி வரும் நிலையில், நிலுவைக் கோரிக்கைகளை விரைந்து பெற கீழ்க்கண்ட இயக்க நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அலுவலர்கள் முழுமையாக பங்கு பெற வேண்டும் என மாநில மையத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- 25.6.2025 - FERA கூட்டமைப்பின் சார்பில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு, மாவட்டத் தலைநகர் பேரணி மற்றும் தர்ணா போராட்டம்.
- 3.7.2025 - TNROA சார்பில் நிலுவைக் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து மாவட்டத் தலைநகரில் 24 மணி நேரம், இரவு பகலாக, தொடர் காத்திருப்பு போராட்டம்.
ஒன்றுபடுவோம்,
போராடுவோம்,
வெற்றி பெறுவோம்!
மாநில மையம்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA)
Post a Comment