வருவாய்த்துறை கூட்டமைப்பு
(FERA)
சிவகங்கை
உயர்மட்ட குழு கூட்ட முடிவுகள் - சென்னை
- தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் பணி மேம்பாடு மற்றும் பொதுவான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வென்றெடுத்திடும் நோக்கத்திற்காக இத்துறையில் இயங்கி வரும் அங்கீகரிக்கப்பட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் சார்பில் வருவாய்த்துறை கூட்டமைப்பினை ஏற்படுத்திட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் கீழ்கண்ட சங்கங்கள் ஒன்றிணைத்து கடந்த 14.07.2024 அன்று வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
- தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம்
- தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம்
- தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம்
- தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு
- வருவாய் நிருவாக ஆணையரகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை அலுவலர்கள் சங்கம்
- தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்
- இக்கூட்டமைப்பின் சார்பில் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த 14.07.2024 அன்று திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கக் கட்டடத்திலும், இதனைத் தொடர்ந்து முதலாவது அமைப்புக் கூட்டம் கடந்த 24.08.2024 அன்று திருப்பூர் மாநகரிலும் நடைபெற்றது.
- இந்த அமைப்பு கூட்டத்தில் அனைத்து நிலையிலான வருவாய்த்துறை அலுவலர்களின் நலன் சார்ந்த பல்வேறு பொருட்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
- கூட்ட முடிவாக ஒருங்கிணைப்பாளர் குழு மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் மாநிலத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் மாநிலப் பொருளாளர் ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவினை ஏற்படுத்தி முதலாவது உயர்மட்டக் குழு கூட்டத்தினை 04.10.2024 அன்று சென்னையில் கூட்டி விவாதித்து தீர்மானங்களை இயற்றி அரசுக்கு முறையீடு அளித்திடுவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
- கடந்த 24.08.2024 அன்று நடைபெற்ற அமைப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி வருவாய்த்துறை கூட்டமைப்பின் முதலாவது உயர் மட்ட குழு கூட்டம் 04.10.2024, காலை 10.00 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எம்.பி.முருகையன், ந.சுரேஷ், மோகனரங்கள், அண்ணா.குபெரன், பி.வி.ஆனந்த், எஸ்.ரவி ஆகியோர் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.
- இக்கூட்டத்தில் பின்வரும் சங்கங்களின் மாநிலத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்
- தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம்
- தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம்
- தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு
- வருவாய் நிருவாக ஆணையரகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை அலுவலர்கள் சங்கம்
- தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்
- மேற்கண்ட உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொண்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்த செழுமையான கருத்துக்களின் அடிப்படையில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
FERA கூட்டமைப்பு - சிவகங்கை மாவட்டம்
- வருவாய்த்துறையில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள், நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் அடங்கிய வருவாய்த்துறை கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்ட முதல் கூட்டம், 25.01.2025 திங்கள் கிழமை மாலை 5.00 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இளங்கோவன் அரங்கத்தில் நடைபெற்றது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம்:1
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் நாள்தோறும் புதுப்புது விதமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, இத்திட்டங்களின் கீழ் பல்வேறு மனுக்களை பெற்று அவற்றை மிகக்குறுகிய கால அளவில் முடிவு செய்திடவும், எட்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து 24 மணி நேரமும் பணிபுரிந்திடும் வகையில் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும் அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுகிறது. மேலும் திட்டப்பணிகளுக்காக எவ்வித நிதி ஒதுக்கீடும் வழங்கப்படாமல் அனைத்து வகையிலான செலவுகளையும் வருவாய்த்துறை அலுவலர்களே மேற்கொள்ளும் வகையில் கடுமையான நிதி நெருக்கடி உருவாக்கப்படுகிறது. இதனால் வருவாய் & பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறை ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களும் கடும் பணிச்சுமையடனும், மன உளைச்சலுடனும் பணிபுரிந்து வருகின்றனர். எனவே இப்பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்திடுமாறும், மேலும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அதீத பணி நெருக்கடி ஏற்படுத்தப்படுவதை தவிர்த்திடுமாறும், தமிழக அரசை இக்கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது
தீர்மானம்: 2
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறை மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் அலுவலகத்தல் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய பணி பாதுகாப்பு அளித்திடுமாறும், வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடைபெறும்பட்சத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிட, "வருவாய்த்துறை அலுவலர்கள் பணிபாதுகாப்பு சட்டத்தை" உடன் நிறைவேற்றிடுமாறும் தமிழக அரசை இக்கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 3
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறை மற்றும் வருவாய் நிருவாக ஆணையர் அலுவலகம் ஆகியவற்றில் அனைத்து நிலையிலான காலிப்பணியிடங்களையும் விரைந்து நிரப்பிடுமாறு தமிழக அரசை இக்கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 4
- தமிழக அரசுத் துறைகளில் 25% பணியிடங்கள் கருணை அடிப்படை நியமனத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி கருணை அடிப்படை பணிநியமனத்திற்கான உச்சவரம்பு 25% லிருந்து 5% ஆக குறைத்து மறுநிர்ணயம் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டு, கருணை அடிப்படை பணிநியமனம் என்பதே முற்றிலும் ஒழிக்கப்படும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வினால் பணியிலிருக்கும் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படை பணி நியமனம் வழங்குவதில் மிகுந்த தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தின் வறிய சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படை பணி நியமனத்திற்கு உச்சவரம்பு 5% என குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை இரத்து செய்து மீண்டும் 25% ஆக உயர்த்தி வழங்கிடவும், கிராம உதவியாளர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் இரத்து செய்யப்பட்டுள்ளதை மீண்டும் வழங்கிடுமாறும் தமிழக அரசை இக்கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 5
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறை மற்றும் வருவாய் நிருவாக ஆணையரகம் உள்ளிட்டவற்றில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் பணிப்பளு மற்றும் பணித்தன்மையினை கருத்தில் கொண்டு அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிடுமாறு தமிழக அரசை இக்கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 6
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலைகளிலும், வெளிமுகமை, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும் என்றும், அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என இக்கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 7
- வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை அடிப்படையில் தீர்வு ஏற்படுத்திட உடன் அரசு மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை இக்கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
தோழர்களே,
இதில் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள சங்கங்களின் சார்பாக கீழ்க்காணும் தோழர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
1) திரு. வி.எஸ். சேகர்.
மாவட்டத் தலைவர்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்.
2) திரு. தர்மராஜ்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்,
3) திரு. பெரியசாமி,
மாவட்ட தலைவர்,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலாகள்; முன்னேற்ற சங்கம்,
4) திரு. கார்த்திக்
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு
5) திரு. ராஜமார்த்தாண்டன்,
மாவட்டத் தலைவர்,
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்.
நிதிக்காப்பாளர்:
திரு. கமலதாசன்,
அமைப்புச் செயலாளர்,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்,
மேற்கண்ட கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நிதிக்காப்பாளரிடம், உறுப்புச் சங்கங்கள் சார்பாக முதல்கண்ட பங்களிப்பு தொகையாக ரூ.1000- செலுத்தி, எதிர்கால செலவினங்களை எதிர்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட மையம்,
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்,
சிவகங்கை.
Post a Comment