13.06.2025 - பெரா-சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டம்
நாள்: 13.06.2025
வெள்ளிக்கிழமை- மாலை 6.00 மணி
அன்பார்ந்த தோழர்களே,
சிவகங்கை மாவட்ட, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (பெரா), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், நாகேந்திரன், வேல்முருகன், பெரியசாமி, ராஜமார்த்தாண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
- பெரா சார்பாக – எதிர்வரும் 25.06.25 அன்று நடைபெற உள்ள ஒரு நாள் தற்செயல் விடுப்பு, பேரணி, தர்ணா போராட்டத்தை சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவது.
- 18.6.25-20.6.25 வரை மூன்று நாட்கள் பிரச்சார இயக்கம் நடத்துவது.
- 25.06.25 அன்று பேரணியை சிவகங்கை கோர்ட் வாசலில் துவங்கி-அரண்மனை வாசலில் நிறைவு செய்வது.
- உறுப்புச் சங்கங்கள் செலவினங்களுக்காக ரூ.5000- வழங்குவது.
இக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.எம்.பி.முருகைய்யன் கலந்து கொண்டு சிறப்பான உரையினை வழங்கினார்கள்.
இறுதியில் நிதிக்காப்பாளர் அசோக்குமார் நன்றி தெரிவித்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,
பெரா,
சிவகங்கை.
Post a Comment