'உறவுகள்' - ஓய்வு பெற்ற அலுவலர்கள் வாட்ஸ்அப் குழு
தோழர்களே,
உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களிலிருந்து, நமது சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியராக, மாவட்டவருவாய் அலுவலராக பதவி உயர்வு பெற்று பணிபுரியும் அலுவலர்களை ஒருங்கிணைப்பதற்காக, 'உறவுகள்' என்ற புதிய வாட்ஸ்அப் குழு துவங்கப்படுகிறது.
இக்குழுவில் சங்க பாகுபாடு இன்றி அனைவரும் இணைக்கப்படுவார்கள். முதல்கட்டமாக மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இக்குழுவில் இணைக்கப்படுவார்கள். நமது TNROA SIVAGANGAI குழுவில் பகிரப்படும் அனைத்து செய்திகளும், 'உறவுகள்' குழுவிலும் பகிரப்படும்.
எனவே, இன்று முதல் படிப்படியாக இக்குழுவில் உள்ள ஓய்வு பெற்ற அலுவலர்கள் நீக்கப்பட்டு புதிய குழுவில் இணைக்கப்படுவார்கள்.
TNROA SIVAGANGAI குழுவில் தற்சமயம் சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் பணிபுரியும் அலுவலர்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பார்கள்.
நன்றி.
மாவட்ட மையம்,
TNROA,
சிவகங்கை.
🍓🟢🍓🟢🍓🟢🍓🟢🍓🟢
Post a Comment