FERA கூட்டமைப்பு - வருவாய் நிர்வாக ஆணையர் சந்திப்பு - 9.6.2025

 FERA கூட்டமைப்பு - வருவாய் நிர்வாக ஆணையர் சந்திப்பு - 9.6.2025



  • அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் தொடர்பாக இன்று, (9.6.2025) FERA கூட்டமைப்பின் சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர் முனைவர்.எம்.சாய்குமார், இ.ஆ.ப., அவர்களை சந்தித்து விரிவாக பேசப்பட்டது.
  • வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்றுவது தொடர்பாக, ஏற்கனவே மருத்துவர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது எடுத்துரைத்து, விரைவில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சட்டம் இயற்ற வலியுறுத்தப்பட்டது.
  • கருணை அடிப்படையிலான நியமனங்களுக்கு ஏற்பட்டுள்ள தடை நீக்குவதற்கு ஏற்கனவே கருத்துரு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஆணைகள் பெற்றுத்தர வலியுறுத்தப்பட்டது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஏற்கனவே கல்வித் தகுதி அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு கருணை அடிப்படையிலான நியமனம் வழங்கப்பட்டமைக்கான அரசு ஆணைகள் வழங்கப்பட்டு கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
  • அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம் வழங்க கோரியதில் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் தனி ஊதியம் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து விரைவில் முழுமையான கருத்துக்கள் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
  • ஜூலை 1 - வருவாய்த்துறை தினமாக அங்கீகாரம் செய்வதற்கான அரசாணை விரைவில் வழங்கிட வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களிடம் வலியுறுத்தி பேசப்பட்டது.
  • வருவாய்த்துறையில் நிலவிவரும் அதீதமான பணி நெருக்கடி, காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்த ஆணையர் அவர்கள் வருகின்ற 25.6.2025 போராட்டத்திற்கு முன்பாகவே அனைத்து இனங்களுக்கும் அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்படும் என உறுதி அளித்துள்ளார்.
  • இச்சந்திப்பில் FERA சார்பில் TNROA மாநிலத் தலைவர் எம்.பி.முருகையன்,  TNVAOA பொதுச் செயலாளர் சி.குமார், TNVAOMS மாநிலத் தலைவர் அ.பூபதி, TNSOU பொதுச் செயலாளர் அண்ணா.குபேரன், TNRVEA மாநிலப் பொருளாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • கோரிக்கைகள் அனைத்தையும் முழுமையாக வென்றெடுக்க வருகின்ற 25.6.2025 ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு, மாவட்டத் தலைநகர் பேரணி மற்றும் தர்ணாவில் அனைத்து நிலை அலுவலர்களும் 100% பங்கேற்போம்.


மாநில அமைப்பு,

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA).

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Post a Comment

Previous Post Next Post