FERA கூட்டமைப்பு - உயர் அலுவலர்கள் & மாண்புமிகு அமைச்சர்கள் சந்திப்பு - 5.6.2025
- வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் (FERA) சார்பில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் மற்றும் வருவாய் நிர்வாகம் கூடுதல் ஆணையர் உள்ளிட்ட உயர் அலுவலர்களை சந்தித்து, உயர்மட்ட குழு கூட்ட முடிவுகள் வழங்கி FERA கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.
- கோரிக்கைகளில் குறிப்பாக வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம், கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பை மீண்டும் 25 சதவீதமாக உயர்த்துவது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பிய பரிந்துரை, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம், காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட இனங்கள் குறித்து விரைவில் பரிசீலனை செய்து ஆணைகள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் வருகின்ற 25.6.2025 மாநிலம் முழுவதும் அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களும் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து, மாவட்டத் தலைநகர் பேரணி மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து பேசப்பட்டுள்ளது.
- 25.6.2025 ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு, மாவட்டத் தலைநகர் பேரணி மற்றும் தர்ணா போராட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சமாக 1,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்பதை உறுதி செய்வோம்!
இலக்கை நோக்கி முன்னேறுவோம்! வெற்றி பெறுவோம்!
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA),
மாநில அமைப்பு.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Post a Comment